ஹாசிம் ஆம்லாவின் சாதனையை முறியடித்த பாபர் ஆசாம்!
நெதர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 74 ரன்கள் அடித்ததன் மூலம், ஹாஷிம் ஆம்லாவின் சாதனையை முறியடித்தார் பாபர் ஆசாம்.
சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக வளர்ந்துள்ள பாபர் ஆசாம், சர்வதேச கிரிக்கெட்டில் பழைய பேட்டிங் சாதனைகளை முறியடித்து புதிய மைல்கற்களை எட்டிவருகிறார்.
இந்திய அணியின் முன்னால் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் சாதனைகளை தகர்த்துவந்த நிலையில், சுமார் கடந்த 3 ஆண்டுகளாக கோலி பார்மில் இல்லாமல் தவித்துவரும் நிலையில், இப்போது பாபர் அசாம் கோலியின் சாதனைகளையும் சேர்த்து தகர்த்துவருகிறார்.
Trending
நெதர்லாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 314 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் அணியில் அபாரமாக விளையாடிய ஃபகர் ஸமான் சதமடித்தார்.
ஃபகர் ஜமான் 109 ரன்களை குவித்த நிலையில், கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் விளையாடி 74 ரன்களை குவித்தார். இப்போட்டியில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிவந்த அவர் 74 ரன்களைச் சேர்த்தார். இந்த 74 ரன்களுடன் சேர்த்து 88 ஒருநாள் இன்னிங்ஸின் முடிவில் 4481 ரன்களை குவித்துள்ளார்.
இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெடில் 88 இன்னிங்ஸின் முடிவில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஹாஷிம் ஆம்லாவின் (4473) சாதனையை பாபர் ஆசாம் முறியடித்துள்ளார் பாபர் அசாம்.
Win Big, Make Your Cricket Tales Now