
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வந்த நியூசிலாந்து அணி 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளைப் பெற்று தொடரை சமன்செய்திருந்தது. இதையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 4-1 என்ற கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி அசத்தியது.
அதிலும் இந்த ஒருநாள் தொடரில் அபாரமாக பேட்டிங் ஆடி பாகிஸ்தான் அணி 4-1 என ஒருநாள் தொடரை வெல்ல உதவினார். இந்த தொடரின் கடைசி ஒருநாள் போட்டிதான் அவரது 100ஆவது ஒருநாள் போட்டி. 100ஆவது ஒருநாள் போட்டியில் ஒரு ரன் மட்டுமே அடித்திருந்தாலும், 100 ஒருநாள் போட்டிகளில் 18 சதங்களுடன் 59.17 என்ற சராசரியுடன் 5089 ரன்களை குவித்துள்ளார். இதன்மூலம் முதல் 100 ஒருநாள் போட்டிகளின் முடிவில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை பாபர் அசாம் படைத்துள்ளார்.
இந்த பட்டியலில் 2ஆம் இடத்தில் ஹாஷிம் ஆம்லா (4808) மற்றும் 3ஆம் இடத்தில் ஷிகர் தவான்(4309) ஆகிய இருவரும் உள்ளனர். ஒருநாள் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்து புதிய மைல்கற்களை எட்டிவரும் நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் தனக்கு மிகவும் பிடித்த இன்னிங்ஸ் எதுவென்று தெரிவித்துள்ளார் பாபர் அசாம்.