புதிய 360 வீரர் பாபர் அசாம்; பங்கமாக கலாய்க்கும் ரசிகர்கள்!
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இழந்த தன்னுடைய ஃபார்மை மீட்டெடுத்து மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பதற்காகவும் விரைவில் நடைபெறும் பிஎஸ்எல் தொடருக்காகவும் தீவிர வலைப்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் இந்தியாவுக்காக விளையாடும் லட்சியத்தில் கடுமையாக போராடி தாமதமாக 30 வயதில் கடந்த 2021ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதனாலேயே வாய்ப்புகளை வீணடிக்காமல் பெரும்பாலான போட்டிகளில் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் எதிரணி எப்படி பந்து வீசினாலும் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே பவுலர்களை செட்டிலாக விடாமல் அடித்து நொறுக்கி பெரிய ரன்களை குவித்து வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் அவர், டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி போன்ற இதர இந்திய வீரர்களை காட்டிலும் அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்று லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக உருவெடுத்துள்ளார்.
அதை விட எப்படி பந்து வீசினாலும் மைதானத்தின் நாலாபுறங்களிலும் கற்பனை செய்து பார்க்காத அளவுக்கு புது புது ஷாட்களை விளாசும் அவர் விக்கெட் கீப்பர் திசைக்கு மேல் அசால்டாக அடிக்கும் சிக்ஸர்களை பார்த்து வியக்காதவர்களே இருக்க முடியாது என்று சொல்லலாம். அதனாலேயே இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று ரசிகர்கள் கொண்டாடும் அவரை கிறிஸ் கெயில், ஏபி டீ வில்லியர்ஸ் ஆகியோரை மிஞ்சிய புதிய யுனிவர்சல் பாஸ் என்றும் ரிச்சர்ட்ஸ், சச்சின், விராட் கோலி ஆகியோரது வரிசையில் நூற்றாண்டுக்கு ஒருமுறை வரும் மகத்தான வீரர் என்றும் கபில் தேவ் போன்ற முன்னாள் வீரர்கள் பாராட்டினர்.
Trending
அத்துடன் எப்போதும் 4ஆவது இடத்தில் களமிறங்கி அழுத்தமான மிடில் ஓவர்களில் 180 ஸ்ட்ரைக் ரேட்டில் மாயாஜால பேட்டிங் செய்த காரணத்தால் குறுகிய காலத்திலேயே பவர் பிளே ஓவர்களில் அடித்த நொறுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலாக செயல்பட்ட பாகிஸ்தானின் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோரை மிஞ்சிய சூரியகுமார் யாதவ், 2022 ஆசிய கோப்பையின் போது உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக உருவெடுத்தார். மேலும் 2022ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் என்ற ஐசிசி விருதையும் வென்ற அவரை போல் விளையாட வேண்டும் என்பதே தற்சமயத்தில் டி20 கிரிக்கெட்டில் விளையாடும் பேட்ஸ்மேன்களின் கனவாக இருக்கிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இழந்த தன்னுடைய ஃபார்மை மீட்டெடுத்து மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பதற்காகவும் விரைவில் நடைபெறும் பிஎஸ்எல் தொடருக்காகவும் தீவிர வலைப்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதை படம் பிடித்த பிரபல கிரிக்கெட் பாகிஸ்தான் இணையம் “பாபர் அசாம் புதிய மிஸ்டர் 360 டிகிரி” என்ற தலைப்புடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. அதில் 360 டிகிரியில் பேட்டிங் செய்ய முயற்சிக்கும் பாபர் அசாம் 3 ஷாட்டுக்கு மேல் பந்தை வளைத்து அடிக்க முடியாமல் மீண்டும் நேராகவே அடிக்கிறார்.
அதை பார்த்த இந்திய ரசிகர்கள் காப்பி அடித்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா? என்று பாபர் அசாமை வழக்கம் போல கலாய்த்து வருகிறார்கள். ஏனெனில் பவர் பிளே ஓவர்களில் சாதாரணமாகவே அதிரடியாக விளையாட வேண்டிய அவர் தடவலாக செயல்பட்டது 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக அமைந்தது.
Good to see Babar Azam trying to increase his range of strokes. The new Mr. 360 pic.twitter.com/x3H8XampDr
— Farid Khan (@_FaridKhan) February 4, 2023
அத்துடன் கேப்டனாக அணியின் நலனுக்காக ஓப்பனிங் இடத்தை இளம் வீரர்களுக்கு விட்டுக்கொடுத்து சூர்யகுமார் யாதவ் போல மிடில் ஆர்டரில் விளையாடுமாறு வாசிம் அகரம் போன்ற ஜாம்பவான்கள் சொன்னதையும் கேட்காத அவர் தொடர்ந்து சுயநலமாக ஓப்பனிங் இடத்திலேயே விளையாடி வருகிறார். அதனால் சாதாரணமாகவே அதிரடியாக விளையாட முடியாத பாபர் அசாம் 360 டிகிரி பேட்ஸ்மேன் அல்ல வேண்டுமானால் 180 டிகிரி பேட்ஸ்மேன் என்று புதிய பட்டத்தை சூட்டுங்கள் என அந்த வீடியோவை பதிவிட்ட இணையதள பக்கத்தையும் ரசிகர்கள் கலாய்க்கிறார்கள்.
Win Big, Make Your Cricket Tales Now