
ஐபிஎல் 15வது சீசனில் ரசிகர்கள் அனைவருக்கும் வியக்கும் அளவிற்கு தரமான கம்பேக் கொடுத்திருந்தார் ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக். 6வது, 7வது வீரராக களமிறங்கிய அவர் 16 போட்டிகளில் 330 ரன்களை விளாசினார். இதன் காரணமாக தென்னாப்பிரிக்க தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் போது தினேஷ் கார்த்திக் ஒரு சுவாரஸ்ய பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், “ பாபர் ஆசாம் ஒரு அற்புதமான வீரர். மூன்று விதமான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் பேட்டிங் வரிசையில் எந்த இடத்தில் விளையாடினாலும் நன்றாக விளையாடுகிறார். பாகிஸ்தான் நாட்டிற்காக சிறப்பான பங்களிப்பை செய்து வருகிறார். அவர் பேட்டிங் திறமையின் உச்சத்தில் இருக்கிறார். அவரால் நிச்சயமாக மூன்று விதமான போட்டிகளிலும் முதலிடம் பிடிக்க முடியும்.
‘ஃபேப் ஃபோர்’ (இந்தியாவின் விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், இங்கிலாந்தின் ஜோ ரூட்) வலுவான நிலையில் நீண்ட காலமாக இருக்கிறார்கள். நிச்சயமாக இவரும் இதில் சேர்ந்து ‘ஃபேப் ஃபைவ்’ ஆக மாற்றுவார்.