
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றதன் மூலம் பாகிஸ்தான் ஐசிசி தரவரிசை பட்டியலில் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் சிறிது புள்ளிகள் முன்னேறி 118 புள்ளிகளுடன் பாகிஸ்தான் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த நிலையில், கடின உழைப்பால் பாகிஸ்தான் அணி ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தை பிடித்திருப்பதாக அந்த அணியின் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ஐசிசி தரவரிசையில் பாகிஸ்தான் முதலிடம் பிடித்ததற்கு அணி வீரர்கள் அனைவரின் கடின உழைப்பே காரணம்.
நீங்கள் எப்போது ஐசிசி தரவரிசையில் முதல் இடம் பிடித்தாலும் அது கண்டிப்பாக உங்களுக்கு அதிக மகிழ்ச்சியை கொடுக்கப் போகிறது. முதல் இடம் பிடித்ததற்கு ஒட்டுமொத்த அணியின் உழைப்புமே காரணம். நாங்கள் முதல் இடத்தில் ஏற்கனவே இருந்தோம். துரதிருஷ்டவசமாக ஒரு தோல்வியினால் அந்த இடத்தை இழந்தோம்.