Advertisement

சக அணி வீரரின் காதலியுடன் ஆபாசமான உறையாடல்; புதிய சர்ச்சையில் சிக்கிய பாபர் ஆசாம்!

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், சக அணி வீரரின் காதலியுடன் ஆபாசமான உறையாடல் நடத்தும் காணொளி வெளியாகி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan January 16, 2023 • 19:31 PM
Babar Azam's Alleged Personal Videos Leaked On Social Media, Netizens React In Shock
Babar Azam's Alleged Personal Videos Leaked On Social Media, Netizens React In Shock (Image Source: Google)
Advertisement

சமீபத்தில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வந்த நியூசிலாந்து அணி, அந்த அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் மீதும், அந்த அணியின் கேப்டன் மீதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

அதிலும் இத்தொடருக்கு முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி என்றால் சர்ச்சைகள் அடிக்கடி வந்துக்கொண்டே தான் இருக்கும் என்பது வழக்கமாகிவிட்டது. சமீபத்தில் அந்நாட்டு வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்து ரமீஷ் ராஜா நீக்கப்பட்டார். இது ஒருபுறம் இருக்க, பாகிஸ்தான் அணியில் உள்ள பல வீரர்களையும் மாற்ற வேண்டும் மற்றும் பாபர் ஆசாமின் கேப்டன்சியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வந்தன.

Trending


இந்நிலையில் பாபர் ஆபாச குறித்து புதிய பூகம்பம் கிளம்பியுள்ளன. அதாவது பாபர் ஆசாம், தனது சக அணி வீரரின் காதலியுடன் ஆபாசமாக மெசேஜ் செய்துக்கொண்டிருந்துள்ளார். வீடியோ காலில் பேசுவதும் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், " நீ என்னுடன் தொடர்ந்து இதே போல ஆபசமாக பேசிக்கொண்டும், நடந்துக்கொண்டும் இருந்தால், உனது காதலனை அணியில் இருந்து நீக்கவே மாட்டேன்" என உறுதி கொடுத்தது போல இடம் பெற்றுள்ளது.

அது எந்த வீரருடைய காதலி என்பது இதுவரை தெரியவரவில்லை. மேலும் சிலர், அது பாபர் அசாம் கிடையாது, அவரை போன்றே உள்ள வேறு ஒருநபரின் காணொலியை போலியாக உருவாக்கி பிரச்சினையை கிளப்பியுள்ளனர் என ஆதரவுக் குரல்கள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து பாகிஸ்தான் வாரியம் விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை தெரியவரும்.

பாபர் ஆசாம் மீது இதுபோன்ற குற்றச்சாட்டு வருவது இது முதல்முறையல்ல. இதாற்கு முன்னர் ஹமிசா முக்தர் என்ற பெண், பாபர் தன்னை பாலியல் ரீதியல் துன்புறுத்தியதாகவும், மிரட்டியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்த விசாரணைகளும் அப்போது நடத்தப்பட்டது. இறுதியில் புகழுக்காக பொய்யான குற்றச்சாட்டை வைத்ததாக அப்பெண்ணே புகாரை திரும்பப்பெற்றார். தற்போது மீண்டும் அதே போன்ற பிரச்சினை வெடித்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க, பாபர் ஆசாமிற்கு சமீப காலமாகவே அழுத்தங்கள் சூழ்ந்துக்கொண்டே தான் உள்ளது. சொந்த மண்ணில் இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரையும், நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் பாகிஸ்தான் இழந்தது. இதற்கு பொறுப்பேற்று பாபரை கேப்டன்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement