IND vs PAK: கருப்பு பட்டை அணிந்து விளையாடும் பாகிஸ்தான் அணி!
பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணை நிற்பதை காட்டும்வகையில், ஆசிய கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இன்று துபாயில் நடந்துவரும் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆடிவருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
Trending
முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடியது. அந்த அணியின் நட்சத்திர வீரர்களான பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான், ஃபகர் ஸமான் ஆகிய மூவருமே சோபிக்காததால் 19.5 ஓவர்களில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதற்கிடையில், இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடிவருகின்றனர். பாகிஸ்தானில் பெய்த கடும் மழையால் அந்நாட்டு மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டனர். பாகிஸ்தானில் பெய்த கடும் மழையால் 3 கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர். 900க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 4 லட்சம் வீடுகள் பாழடைந்தன. சுமார் 2 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
எனவே அவர்களுக்கு துணை நிற்பதை தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.
Win Big, Make Your Cricket Tales Now