IND vs NZ, 2nd T20I: பந்துவீச்சில் புதிய சாதனை நிகழ்த்திய சஹால்!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் சஹல் ஒரு விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்களை (91 விக்கெட்கள்) வீழ்த்திய முதல் பந்துவீச்சாளார் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆனதைத் தொடர்ந்து, தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் ராஞ்சியில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து அணி அபாரமாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது டி20 போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 99 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி கடைசி ஓவரில் இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-1 என்ற கணக்கில் டி20 தொடரை சமன்செய்துள்ளது.
இந்நிலையில், இப்போட்டியில் சஹல் ஒரு விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்களை (91 விக்கெட்கள்) வீழ்த்திய முதல் பந்துவீச்சாளார் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக இந்திய அணியின் புவனேஷ்வர் குமார் 90 விக்கெட்களுடன் முதலிடத்தில் இருந்தார். அதனை தற்போது சஹால் முந்தி முதலிடத்தை தனதாக்கினார்.
Win Big, Make Your Cricket Tales Now