BAN vs PAK, 2nd Test: சஜித் கான் சுழலில் சிக்கிய வங்கதேசம்!
பாகிஸ்தானுடனான 2ஆவது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்துள்ளது.
வங்கதேசம் - பாகிஸ்தான் இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி மிர்பூரில் நடைபெற்று வருகிறது. முதலிரண்டு நாள்களில் மழை பாதிப்பால் 63.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. 3ஆவது நாள் ஆட்டம் மழையால் முழுமையாகத் தடைபட்டது.
2 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்திருந்த பாகிஸ்தான் 4ஆம் நாள் ஆட்டத்தைத் தொடங்கி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்த நிலையில் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது பாகிஸ்தான்.
Trending
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 76 ரன்களும், அசார் அலி 56 ரன்களும், முகமது ரிஸ்வான் 53 ரன்களும், ஃபவாத் அலாம் 50 ரன்களும் எடுத்தனர்.
தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசத்துக்கு பேட்டர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. பாகிஸ்தானின் சுழற்பந்துவீச்சாளர் சஜித் கான் சுழலில் வங்கதேச பேட்டர்கள் அடுத்தடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதனால் 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 76 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. ஃபாலோ ஆனை தவிர்க்க வங்கதேசத்துக்கு இன்னும் 24 ரன்கள் தேவைப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now