
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4ஆவது போட்டியில் வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு முகமது நைம் - மெஹதி ஹசன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் 28 ரன்களை எடுத்திருந்த நைம் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தாஹித் ஹிரிடோயும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் மெஹிதி ஹசனுடன் நஜ்முல் ஹொசைன் ஜோடி சேர்ந்தார்.
இருவரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், ஆஃப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சையும் நாலாபுறமும் சிதறடித்தனர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மெஹிதி ஹசன் மற்றும் நஜ்முல் ஹொசைன் சாண்டோ இருவரும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தங்களது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.