
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டில் சில்ஹாட்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் கேப்டன் தமிம் இக்பால் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த லிட்டன் தாஸ் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதன்பின் லிட்டன் தாஸ் 26 ரன்களிலும், நஜ்முல் ஹுசைன் 25 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஷாகிப் அல் ஹசன் - தவ்ஹித் ஹிரிடோய் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன், 150 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைந்து அசத்தினர். அதன்பின் இருவரும் சதமடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷாகிப் அல் ஹசன் 93 ரன்களிலும், தவ்ஹித் ஹிரிடோய் 92 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.