Advertisement
Advertisement

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேசம் vs நேபாள்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள வங்கதேசம் மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan June 16, 2024 • 08:53 AM
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேசம் vs நேபாள்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேசம் vs நேபாள்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Advertisement

 

Bangladesh vs Nepal Match 37 Dream11 Prediction, ICC T20 World Cup 2024: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இத்தொடரில் நாளை நடைபெறவுள்ள 37ஆவது லீக் ஆட்டத்தில் வங்கதேச மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நடப்பு உலகக்கோப்பை தொடரில் நேபாள் அணி விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு தோல்விகளைச் சந்தித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது. அதேசமயம் வங்கதேச அணியானது சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற இந்த வெற்றியானது மிகவும் முக்கியம். இதனால் நிச்சயம் இப்போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது என உறுதியாக நம்பலாம். 

Trending


BAN vs NEP: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - வங்கதேசம் vs நேபாள்
  • இடம் - அர்னோஸ் வேல் மைதானம், செயின்ட் வின்சென்ட்
  • நேரம் - ஜூன் 17, அதிகாலை 05 மணி (இந்திய நேரப்படி)

BAN vs NEP Pitch Report

இந்த போட்டி கிங்ஸ்டவுனில் உள்ள அர்னோஸ் வெல் மைதானத்தில் நடைபெறுகிறது. இங்கு இதுவரை மொத்தம் 6 டி20 சர்வதேசப் போட்டிகள் நடந்துள்ளன. இதில் தலா மூன்று முறை பேட்டிங் மற்றும் சேஸிங் செய்த அணிகாள் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளன. மேலும் இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோரானது 118 ரன்களாவும், இங்கு அதிகபட்ச ஸ்கோர் 158 ரன்களாகவும் இருப்பதால், நிச்சயம் பந்துவீச்சாளர் ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

BAN vs NEP T20I Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 01
  • வங்கதேசம் - 01
  • நேபாள் - 00

BAN vs NEP: Where to Watch?

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

Bangladesh vs Nepal Probable Playing XI

வங்கதேசம் உத்தேச லெவன்: தன்ஸித் ஹசன், நஸ்முல் ஹுசைன் சாண்டோ (கேப்டன்), லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன், தாவ்ஹித் ஹிரிடோய், மஹ்முதுல்லா ரியாத், ஜாகர் அலி, ரிஷாத் ஹுசைன், தஸ்கின் அகமது, தன்சீம் ஹசன் ஷகிப், முஸ்தஃபிசூர் ரஹ்மான்.

நேபாள உத்தேச லெவன்: குஷால் புர்டெல், ஆசிப் ஷேக், ரோஹித் குமார் (கேப்டன்), அனில் ஷா, தீபேந்திர சிங் ஐரி, குஷால் மல்லா, குல்ஷன் ஜா, சோம்பால் கமி, கரண் கேசி, சந்தீப் லாமிச்சானே, அவினாஷ் போஹ்ரா.

BAN vs NEP T20 World Cup Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ஆசிப் ஷேக்
  • பேட்ஸ்மேன்கள் - குஷால் புர்டெல், தன்சித் ஹசன்
  • ஆல்-ரவுண்டர் - மஹ்முதுல்லா ரியாத், ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), தீபேந்தர் சிங் ஏரே (துணை கேப்டன்), ரிஷாத் ஹுசைன்.
  • பந்துவீச்சாளர்கள் - தஸ்கின் அகமது, முஸ்தாஃபிசூர் ரஹ்மான், சந்தீப் லாமிச்சானே, தன்சீம் ஹசன் சாகிப்.

BAN vs NEP Dream11 Prediction, T20 World Cup 2024, Today Match BAN vs NEP, BAN vs NEP Dream11 Team, Fantasy   Cricket Tips, BAN vs NEP Pitch Report, Today   Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Bangladesh vs Nepal

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement
Advertisement