BAN vs NZ, 2nd Test: மீண்டும் அதிரடி காட்டிய கிளென் பிலீப்ஸ்; தொடரை சமன் செய்தது நியூசி!
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்தது.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டியில் வென்ற வங்கதேசம் 1 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதனால் அவமான தோல்வியை தவிர்ப்பதற்காக டிசம்பர் 6ஆம் தேதி தாக்காவில் தொடங்கிய 2ஆவது போட்டியில் கண்டிப்பாக வென்றாக வேண்டிய கட்டாயத்தில் நியூசிலாந்து களமிறங்கியது.
இதில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த களமிறங்கிய நிலையில் நியூசிலாந்தின் தரமான பந்து வீச்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக முஷ்ஃபிக்கூர் ரஹீம் 35, சகாதத் ஹொசைன் 31 ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் சான்ட்னர், கிளன் பிலிப்ஸ் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.
Trending
இதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து சுழலுக்கு சாதகமாக இருந்த மைதானத்தில் வங்கதேசத்தின் துல்லியமான பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் டாம் லாதம் 4, டேவோன் கான்வே 11, கேன் வில்லியம்சன் 13, ஹென்றி நிக்கோலஸ் 1, டாம் பிளன்டல் 0 என முக்கிய பேட்ஸ்மேன்கள்களின் விக்கெட்களை சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
இதனால் 46/5 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு டார்ல் மிட்சேல் 18, சான்ட்னர் 1 ரன்களில் அவுட்டாகி மேலும் பின்னடைவை கொடுத்தனர். அதன் காரணமாக 97/7 என சரிந்த நியூசிலாந்து 150 ரன்கள் கூட தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லோயர் மிடில் ஆர்டரில் மெதுவான பிட்ச்சில் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினால் வேலைக்காகாது என்பதை உணர்ந்த கிளன் பிலிப்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடினர்.
அவருக்கு 8ஆவது விக்கெட்டுக்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு கை கொடுத்த கைல் ஜெமிசன் 20 ரன்களில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் வங்கதேச பவுலர்களை வெளுத்து வாங்கிய கிளன் பிலிப்ஸ் 9 பவுண்டரி 4 சிக்ஸருடன் 87 (72) ரன்களை 120.83 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி நியூசிலாந்தை ஓரளவு காப்பாற்றிய ஆட்டமிழரந்தார். அதனால் தப்பிய நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 180 ரன்கள் எடுத்து 8 ரன்கள் முன்னிலையும் பெற்ற நிலையில் வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக மெஹதி ஹசன், தைஜூல் இஸ்லாம் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.
அதை தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் 3ஆவது நாள் முடிவில் 38/2 என்ற நிலையில் இருநதது. அந்த அணிக்கு ஹசன் ஜாய் 2, சாண்டோ 15 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் களத்தில் ஸாகிர் ஹசன் 16, மோனிமூல் ஹைக் ஆகியோர் களத்தில் இருந்தனர். அதன்படி இன்று தொடங்கிய 5ஆம் நாள் ஆட்டத்தில் களமிறங்கிய வங்கதேசம் சுழலுக்கு சாதகமாக மாறிய பிட்ச்சில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 144 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜாகிர் ஹசன் 59 ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக அஜாஸ் பட்டேல் 6 விக்கெட்டுகள் சாய்த்தார்.
இறுதியில் 136 என்ற இலக்கை துரத்திய நியூசிலாந்துக்கு மீண்டும் டாம் லாதம் 26, டேவோன் கான்வே 2, கேன் வில்லியம்சன் 11, ஹென்றி நிக்கோலஸ் 3, டார்ல் மிட்சேல் 19, டாம் பிளண்டல் 2 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் அப்போதும் வங்கதேசத்திற்கு சிம்ம சொப்பனமாக மாறிய கிளன் பிலிப்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 பவுண்டரி 1 சிக்சருடன் 40 ரன்கள் குவித்தார்.
அவருடன் சான்ட்னர் 35 ரன்கள் எடுத்ததால் 139/6 ரன்களை எடுத்த நியூசிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 1 – 1 என்ற கணக்கில் இத்தொடரை சமன் செய்த நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக வங்கதேசத்திடம் ஒரு தொடரில் சந்திக்க வேண்டிய அவமான தோல்வியை தவிர்த்தது. அத்துடன் வங்கதேச மண்ணில் 2008க்குப்பின் 15 வருடங்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு வெற்றியை பதிவு செய்து நியூசிலாந்து அசத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now