
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டியில் வென்ற வங்கதேசம் 1 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதனால் அவமான தோல்வியை தவிர்ப்பதற்காக டிசம்பர் 6ஆம் தேதி தாக்காவில் தொடங்கிய 2ஆவது போட்டியில் கண்டிப்பாக வென்றாக வேண்டிய கட்டாயத்தில் நியூசிலாந்து களமிறங்கியது.
இதில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த களமிறங்கிய நிலையில் நியூசிலாந்தின் தரமான பந்து வீச்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக முஷ்ஃபிக்கூர் ரஹீம் 35, சகாதத் ஹொசைன் 31 ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் சான்ட்னர், கிளன் பிலிப்ஸ் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து சுழலுக்கு சாதகமாக இருந்த மைதானத்தில் வங்கதேசத்தின் துல்லியமான பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் டாம் லாதம் 4, டேவோன் கான்வே 11, கேன் வில்லியம்சன் 13, ஹென்றி நிக்கோலஸ் 1, டாம் பிளன்டல் 0 என முக்கிய பேட்ஸ்மேன்கள்களின் விக்கெட்களை சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.