
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வங்கதேச அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. மேலும் சொந்த மண்ணில் முதல் முறையாக நியூசிலாந்து அணியை வீழ்த்தியும் வங்கதேச அணி சாதனைப் படைத்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை காலை தாக்காவில் நடைபெறவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணி வென்றுள்ளதால இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை வெல்லும் முனைப்புடன் களமிறங்கவுள்ளது. மறுமக்கம் முந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நியூசிலாந்து அணி விளையாடும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - வங்கதேசம் vs நியூசிலாந்து
- இடம் - ஷேர் பங்களா மைதான, தாக்கா
- நேரம் - காலை 9 மணி (இந்திய நேரப்படி)