
BAN vs NZ: New Zealand Finishes off 128/ 5 (Image Source: Google)
வங்கதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி தாக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஃபின் ஆலன் - ரச்சின் ரவீந்திரா அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். பின் 15 ரன்களில் ஃபின் ஆலன் ஆட்டமிழக்க, 20 ரன்காளில் ரவீந்திராவும் விக்கெட்டை இழந்தார்.
அடுத்து வந்த வில் யங் 20, கிராண்ட்ஹோம் 0, லேதம் 5 என எடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த டாம் பிளண்டல் - ஹென்றி நிக்கோலஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது.