Advertisement

BAN vs PAK, 1st T20I: ஹசன் அலி பந்துவீச்சால் 127 ரன்னில் சுருண்டது வங்கதேசம்!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த வங்கதேச அணி 128 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Advertisement
BAN vs PAK 1st T20I: Pakistan restrict Bangladesh by 127 runs
BAN vs PAK 1st T20I: Pakistan restrict Bangladesh by 127 runs (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 19, 2021 • 03:13 PM

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடவில் இளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று தாக்காவில் நடைபெற்றுவருகிறது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
November 19, 2021 • 03:13 PM

இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் அதிரடி வீரர் முகமது நைம் 1 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

Trending

அதன்பின் சைஃப் ஹொசைன், நஜ்முல் ஹொசைன் ஆகியோரும் ஒற்றை இலக்க ரன்களுடன் வெளியேற வங்கதேச அணியின் பேட்டிங் ஆர்டர் நிலைகுலைந்தது.

பின்னர் ஜோடி சேர்ந்த அஃபிஃப் ஹொசைன் - நூருல் ஹசன் இணை சிறப்பாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மெல்ல மெல்ல உயர்த்தியது. 

பின் 36 ரன்களில் அஃபிஃப் ஹொசைன் ஆட்டமிழக்க, 28 ரன்னில் நூருல் ஹசனும் விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய மெஹதி ஹசன் தனது பங்கிற்கு ஒருசில பவுண்டரிகளை விளாசினார். 

Also Read: T20 World Cup 2021

இதனால் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்களை மட்டுமே சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஹசன் அலி 3 விக்கெட்டுகளையும், முகமது வாசிம் ஜூனியர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement