Advertisement
Advertisement
Advertisement

BAN vs PAK, 1st Test: அஃப்ரிடி அபாரம்; பாகிஸ்தானுக்கு 202 இலக்கு!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan November 29, 2021 • 13:33 PM
BAN vs PAK: Pakistan Need 202 To Win 1st Test
BAN vs PAK: Pakistan Need 202 To Win 1st Test (Image Source: Google)
Advertisement

வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 330 ரன்களைக் குவித்தது. 

அதன்பின் முதல் இன்னிங்ஸில் விளையாடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களைத் தவிர மற்றவர்கள் சொதப்பினர். இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

Trending


அதன்பின் 44 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணி எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனால் 157 ரன்களுக்கே அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement