Advertisement

BAN vs SL, Asia Cup 2023: பதிரனா, தீக்‌ஷனா பந்துவீச்சில் சுருண்டது வங்கதேசம்!

இலங்கை அணிக்கெதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Bharathi Kannan
By Bharathi Kannan August 31, 2023 • 18:40 PM
BAN vs SL, Asia Cup 2023: பதிரனா, தீக்‌ஷனா பந்துவீச்சில் சுருண்டது வங்கதேசம்!
BAN vs SL, Asia Cup 2023: பதிரனா, தீக்‌ஷனா பந்துவீச்சில் சுருண்டது வங்கதேசம்! (Image Source: Google)
Advertisement

நடப்பாண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி பல்லகலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு முகமது நைம் மற்றும் தன்ஸித் ஹசன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தன்ஸித் அகமது ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து 16 ரன்கள் எடுத்திருந்த முகமது நைம், தனஞ்செயா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த நஹ்முல் ஹொசைன் - ஷாகிப் அல் ஹசன் ஓரளவு தாக்குப்பிடித்தனர். 

Trending


பின் ஷாகிப் அல் ஹசன் 5 ரன்களிலும், தாஹித் ஹிரிடோய் 20 ரன்களுக்கும், முஷ்பிக்கூர் ரஹிம் 13 ரன்களுக்கும், மெஹிதி ஹசன் மிராஸ் 5 ரன்களிலும், மஹெதி ஹசன் 6 ரன்களும் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இருப்பினும் மறுபக்கம் அரைசதம் கடந்து சதத்தை நெருங்கிய நஹ்முல் ஹொசைன் சாண்டோ 90 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணி வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, வங்கதேச அணி 42.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய மதீஷா பதிரனா 4 விக்கெட்டுகளையும், மஹீஷ் தீக்‌ஷனா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement