
நடப்பாண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெrற்ற இரண்டாவது போட்டியில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பல்லகலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு முகமது நைம் மற்றும் தன்ஸித் ஹசன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தன்ஸித் அகமது ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து 16 ரன்கள் எடுத்திருந்த முகமது நைம், தனஞ்செயா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த நஹ்முல் ஹொசைன் - ஷாகிப் அல் ஹசன் ஓரளவு தாக்குப்பிடித்தனர்.
பின் ஷாகிப் அல் ஹசன் 5 ரன்களிலும், தாஹித் ஹிரிடோய் 20 ரன்களுக்கும், முஷ்பிக்கூர் ரஹிம் 13 ரன்களுக்கும், மெஹிதி ஹசன் மிராஸ் 5 ரன்களிலும், மஹெதி ஹசன் 6 ரன்களும் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இருப்பினும் மறுபக்கம் அரைசதம் கடந்து சதத்தை நெருங்கிய நஹ்முல் ஹொசைன் சாண்டோ 90 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.