Advertisement
Advertisement
Advertisement

வங்கதேசம் vs இலங்கை, இரண்டாவது ஒருநாள் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!

வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை சட்டோகிராமில் நடைபெறவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan March 14, 2024 • 20:25 PM
வங்கதேசம் vs  இலங்கை, இரண்டாவது ஒருநாள்  - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வங்கதேசம் vs இலங்கை, இரண்டாவது ஒருநாள் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
Advertisement

இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் வங்கதேச அணியை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை சட்டோகிராமில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வங்கதேச அணி வெற்றிபெறும் நிலையில் தொடரை வெல்லும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் - வங்கதேசம் vs இலங்கை
  • இடம் - ஜாஹூர் அகமது சவுத்ரி மைதானம், சட்டோகிராம்
  • நேரம் - மதியம் 2 மணி (இந்திய நேரப்படி)

பிட்ச் ரிப்போர்ட்

சட்டோகிராமில் உள்ள ஜாஹூர் அகமது சவுத்ரி மைதானம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்து வருகிறது. அதேபோல் இங்கு குறைந்த அளவிலான பவுன்ஸ் மட்டுமே கிடைக்கும் என்பதால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் ஆதரவு இருக்கும். இதனால் இந்த மைதானத்தில் ரன்களைச் சேர்ப்பது கடினமாக பார்க்கப்படுகிறது. மேலும் நின்று விளையாடும் பேட்டர்களால் ரன்களைச் சேர்க்க முடியும். இதனல் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீசுவது அணியின் வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

நேரலை 

வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரை ரசிகர்கள் ஃபேன்கோட் செயலியில் நேரலையில் காணலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 55
  • இலங்கை - 42
  • வங்கதேசம் - 11
  • முடிவில்லை - 02

உத்தேச லெவன்

வங்கதேசம்: லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கே), சௌமியா சர்க்கார், முஷ்ஃபிக்கூர் ரஹீம், தாவ்ஹித் ஹிரிடோய், மஹ்முதுல்லா, மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், தன்ன்சிம் ஹசன் சாகிப்

இலங்கை: பதும் நிஷங்கா, குசல் மெண்டிஸ் (கே), அவிஷ்க ஃபெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷனா, லஹிரு குமார, பிரமோத் மதுஷன், தில்ஷன் மதுஷங்கா.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: லிட்டன் தாஸ், குசல் மெண்டிஸ்
  • பேட்டர்ஸ்: பதும் நிஷங்கா, நஜ்முல் ஹொசன் சாண்டோ, மஹ்முதுல்லா
  • ஆல்-ரவுண்டர்கள்: சௌமியா சர்க்கார், வனிந்து ஹசரங்க (கேப்டன்), மெஹதி ஹசன் மிராஸ், ஜனித் லியனகே
  • பந்துவீச்சாளர்கள்: தஸ்கின் அஹ்மத், மஹீஷ் தீக்‌ஷனா

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement