
வங்கதேசம் vs இலங்கை, இரண்டாவது டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்! (Image Source: Google)
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வங்கதேசத்தை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை சட்டோகிராமில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இலங்கை அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - வங்கதேசம் vs இலங்கை
- இடம் - ஜாஹூர் அகமது சவுத்ரி மைதானம், சிட்டோகிராம்
- நேரம் - காலை 9.30 மணி
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 25
- வங்கதேசம் - 01
- இலங்கை - 19
- முடிவில்லை - 05