
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டி20 போட்டியில் வங்கதெச அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று சட்டோகிராமில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர் மருமணி 2 ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரர் ஜெரால்ட் கும்பியும் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கிரேய்க் எர்வின் 13 ரன்களுக்கும், கேப்டன் சிக்கந்தர் ரஸா 3 ரன்களுக்கும், கிளைவ் மடாண்டே ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் ஜிம்பாப்வே அணி 42 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த பிரையன் பென்னட் - ஜானதன் காம்பெல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து 6ஆவது விக்கெட்டிற்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் அரைசதத்தை நெருன்கிய ஜானதன் 4 பவுண்ட்ரி, 3 சிக்ஸர்கள் என 45 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.