Advertisement

வங்கதேசம் vs ஜிம்பாப்வே, மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை சட்டோகிராமில் நடைபெறவுள்ளது.

Advertisement
வங்கதேசம் vs ஜிம்பாப்வே, மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வங்கதேசம் vs ஜிம்பாப்வே, மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 06, 2024 • 03:41 PM

ஜிம்பாப்வே அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டிகளிலும் வங்கதேச அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி நாளை சட்டோகிராமில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் வங்கதேச அணி வெற்றிபெறும் பட்சத்தில் டி20 தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.  

Bharathi Kannan
By Bharathi Kannan
May 06, 2024 • 03:41 PM

போட்டி தகவல்கள்

Trending

  • மோதும் அணிகள் - வங்கதேசம் vs ஜிம்பாப்வே
  • இடம் - ஸஹுர் அஹ்மத் சௌத்ரி மைதானம், சட்டோகிராம்
  • நேரம் - மாலை 2.30 மணி (இந்திய நேரப்படி)

பிட்ச் ரிப்போர்ட்

சட்டோகிராம் மைதானத்தில் உள்ள பிட்ச் வரலாற்றில் ஸ்பின்னர்களுக்கு உதவிகரமாக இருந்துள்ளது. இதனால் இங்கு பேட்டர்களால் தங்களது ஷாட்டுகளை விளையாடுவது மிகவும் கடினமாக உள்ளது. அதுமட்டுமின்றி இந்த மைதானத்தில் முதல் பேட்டிங் செய்யும் அணிக்கு வெற்றிக்கான வாய்ப்பு அதிகம் என்பதால், இப்போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 21
  • வங்கதேசம் - 14
  • ஜிம்பாப்வே - 07

நேரலை

வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இத்தொடரில் இந்திய ரசிகர்கள் எந்த தொலைக்காட்சியிலும் காண இயலாது. அதேசமயம் ஃபேன் கோட் ஓடிடி செயலியில் இத்தொடரை குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி ரசிகர்கள் இத்தொடரை காணலாம்.

உத்தேச லெவன்

வங்கதேசம்: லிட்டன் தாஸ், பர்வேஸ் ஹொசைன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கே), மஹ்முதுல்லா, ஸகர் அலி, தாவ்ஹித் ஹிரிடோய், மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், முகமது சைபுதீன்

ஜிம்பாப்வே: தடிவானாஷே மருமானி, கிரெய்க் எர்வின், பிரையன் பென்னட், சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ரஸா (கே), ரியான் பர்ல், கிளைவ் மடாண்டே, லூக் ஜாங்வே, வெலிங்டன் மஸகட்ஸா, ரிச்சர்ட் நகரவா, பிளெஸ்ஸிங் முசரபானி.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: லிட்டன் தாஸ்
  • பேட்டர்ஸ்: மஹ்முதுல்லா (துணை கேப்டன்), கிரேக் எர்வின், நஹ்முல் ஹொசைன் சாண்டோ
  • ஆல்ரவுண்டர்கள்: சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ரஸா (கேப்டன்), ரியான் பர்ல், மெஹிதி ஹசன்
  • பந்துவீச்சாளர்கள்: தஸ்கின் அகமது, ரிச்சர்ட் நகரவா, ஷோரிஃபுல் இஸ்லாம்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement