BAN vs NZ : 19 பேர் அடங்கிய வங்கதேச அணி அறிவிப்பு!
நியூசிலாந்து அணியுடனான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டது.

டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 17ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இத்தொடரில் வெற்றிபெறும் முனைப்போடு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றனர்.
அந்தவகையில் நியூசிலாந்து அணி அடுத்த மாதம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான நியூசிலாந்து அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இத்தொடருக்கான 19 பேர் அடங்கிய வங்கதேச அணியும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மஹ்மதுல்லா தலைமையிலான இந்த அணியில் முஷ்பிக்கூர் ரஹீம், சௌமியா சர்கார் ஆகியோர் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
வங்கதேச அணி : மஹ்முதுல்லா, ஷகிப் அல் ஹசன், முஷ்பிக்கூர் ரஹீம், சௌமியா சர்க்கார், லிட்டன் தாஸ், மொசாடெக் ஹொசைன், சைகத், அஃபிஃப் ஹொசைன், நைம் ஷேக், நூருல் ஹசன் சோஹன், ஷமிம் ஹொசைன், ரூபல் ஹொசைன், முஸ்தாபிசூர் ரஹ்மான், தஸ்கின் அகமது, முகமது சைஃபுதீன், ஷோரிஃபுல் இஸ்லாம், தைஜுல் இஸ்லாம், மெஹெடி ஹசன், அமினுல் இஸ்லாம் பிப்லாப், நுசும் அகமது.
Win Big, Make Your Cricket Tales Now