
Bangladesh Announce Squad For T20 World Cup 2022; Mahmudullah Left Out While Liton Das Returns (Image Source: Google)
ஏழாவது சீசன் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் துவங்க உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் இந்த தொடரின் முதல் போட்டி அக்டோபர் 16ஆம் தேதி நடைபெற உள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான தங்களது அணிகளை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்திய போன்ற முக்கிய அணிகள் ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில், தற்போது வங்கதேச கிரிக்கெட் வாரியமும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான வங்கதேச அணியை நேற்று அறிவித்துள்ளது.
ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியில், நீண்ட காலம் தன்னுடைய ஃபார்மை மீட்டெடுக்க முடியாமல் தவித்து வந்த ஆல்ரவுண்டர் மஹமதுல்லா நீக்கப்பட்டுள்ளார். மேலும் இவரைத் தொடர்ந்து ஆசிய கோப்பையில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பர்வீஸ் ஹுசைன் எமான், அனாமுல் ஹக் மற்றும் முகமது நைம் நீக்கப்பட்டுள்ளார்.