
வங்கதேச அணி தற்சமயம் ஆஃப்கானிஸ்தானுடன் ஐக்கிய அரபு ஆமீரகத்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு இப்ராஹிம் ஸத்ரான் - செதிகுல்லா அடல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸத்ரான் 15 ரன்னிலும், அடல் 15 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் களமிறங்கிய குர்பாஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய தார்விஷ் ரசூலி ரன்கள் ஏதுமின்றியும், முகமது இஷாக் ஒரு ரன்னிலும், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 18 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். மேற்கொண்டு அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட குர்பாஸ் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்களுட்ன் 40 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு களமிறங்கிய முகமது நபி ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்களை விளாசி 38 ரன்களைச் சேர்த்தார்.
இதன் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் தன்ஸிம் ஹசன் மற்றும் ரிஷாத் ஹொசைன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணிக்கு தன்சித் ஹசன் - பர்வேஸ் ஹொசைன் எமன் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்களின் அரைசதங்களைப் பதிவு செய்ததுடன், 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.