
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வந்தது. இதில் இதுவரை நடைபெற்ற முதலிரண்டு டி20 ஆட்டத்திலும் வங்கதேச அணி வெற்றிபெற்று 2-0 என்ற காணக்கில் தொடரை வென்றவது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று தாக்காவில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் - ரோனி தலுக்தர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் ரோனி தலுக்தர் 24 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
பின்னர் லிட்டன் தாஸுடன் இணைந்த நஜ்முல் ஹுசைன் சாண்டோவும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதேசமயம் மறுபக்கம் அபாரமாக விளையாடிய லிட்டன் தாஸ் அரைசதம் கடந்து அசத்தினார். பின் 73 ரன்கள் சேர்த்த நிலையில் லிட்டன் தாஸின் விக்கெட்டை கிறிஸ் ஜோர்டன் கைப்பற்றினார்.