
ஆசிய கிரிக்கெட் கவுன்சின் யு19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர் கலாம் அல்மீன் ஒரு ரன்னில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஸவாத் அப்ராரும் 20 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஹகிம் தமிமும் 16 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த முகமது ஷிஹாப் ஜேம்ஸ் மற்றும் ரிஸாத் ஹொசைன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டிற்கு 60 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், முகமது ஷிஹப் ஜேம்ஸ் 40 ரன்னிலும், அவரைத்தொடர்ந்து ரிஸாத் ஹொசைன் 47 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். பின்னர் களமிறங்கிய வீரர்களில் ஃபரித் ஹசன் 39 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர்.