
சீனாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த முறை இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு கிரிக்கெட் அணிகளையும் டி20 வடிவத்தில் நடக்கும் கிரிக்கெட் தொடருக்கு அனுப்பி வைத்தது. இந்த நிலையில் தற்போது இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தங்கப் பதக்கத்திற்கான போட்டியில் விளையாடி வருகிறது.
இந்தத் தொடரில் அரை இறுதிக்கு வந்து தோற்ற வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மூன்றாவது இடத்திற்கு வெண்கல பதக்கத்திற்கு மோதிக்கொண்டன. மழையின் காரணமாக ஐந்து ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்தப் போட்டி தற்பொழுது முடிவுக்கு வந்திருக்கிறது.
இந்தப் போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணி 5 ஓவர்களுக்கு ஒரு விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்த பொழுது மழை வந்தது. பாகிஸ்தான் அணியின் தரப்பில் மிர்சா பேக் 18 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 32 ரன்கள் அடித்திருந்தார்.