
Bangladesh Cricket Board (BCB) announces the squad for the second Test! (Image Source: Google)
வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி முதலாவது டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்தப்போட்டிக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் போட்டியில் காயம் அடைந்த எபாடட் ஹொசைன் இந்தப்போட்டியில் இடம் பெறவில்லை. முதல் போட்டியில் இடம் பெறாத சுழற்பந்துவீச்சாளர் நசும் அகமது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.