
பிஎஸ்எல் என்றழைக்கப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. ஆனால் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போர் பதற்றம் காரணமாக, இத்தொடரின் எஞ்சிய போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக இத்தொடரின் எஞ்சிய போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டிருந்தது. ஆனால் இறுதிநேரத்தில் ஐக்கிய அரபு ஆமீரக கிரிக்கெட் வாரியாம பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்க மறுத்ததை தொடர்ந்து இத்தொடரானது தேசி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இத்தொடரில் பங்கேற்றிருந்த வீரர்கள் தற்சமயம் பாதுகாப்பாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றடைந்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக பாகிஸ்தானிலிருந்து துபாய்க்கான இந்தப் பயணத்தின் போது, வெளிநாட்டு வீரர்களிடையே ஒருவித அச்சச் சூழல் காணப்பட்டது.இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோசமான சூழ்நிலைக்கு மத்தியில் துபாயை அடைந்த பிறகு, தானும் மற்ற வெளிநாட்டு வீரர்களும் நிம்மதியாக இருப்பதாக வங்கதேச அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரிஷாத் ஹொசைன் தெரிவித்துள்ளார்.