
Bangladesh have named a strong squad for the first Test against India (Image Source: Google)
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. 3 ஆட்டங்கள் கொண்ட இத்தொடரில் 2-0 என முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது வங்கதேச அணி. 3-வது ஒருநாள் ஆட்டம் சனியன்று நடைபெறவுள்ளது.
டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் டிசம்பர் 14 அன்று தொடங்குகிறது. இந்நிலையில் இந்த முதல் டெஸ்டுக்கான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஷகிப் அல் ஹசன் தலைமையிலான அணியில் முஷ்ஃபிகுர் ரஹிம், யாசிர் அலி, டஸ்கின் அஹமது ஆகியோர் மீண்டும் இடம்பெற்றுள்ளார்கள்.
சில காரணங்களால் இம்மூவரும் வங்கதேச அணியின் முந்தைய டெஸ்ட் தொடரில் இடம்பெறவில்லை. இடக்கை பேட்டர் ஜாகிர் ஹசன் முதல்முறையாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.