
BAN vs NED, 2nd T20I: நெதர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் வங்கதேச அணி வெற்றி பெற்றதன் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 09ஆம் தேதி 09ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக வங்கதேச அணி, நெதர்லாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் நடந்த முடிந்த முதல் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று சில்ஹெட்டில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி எதிரணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அணியின் நட்சத்திர வீரர்கள் மேக்ஸ் ஓடவுட் 8 ரன்களுக்கும், தேஜா நிடமனுரு ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 9 ரன்களுக்கும், ஷரிஸ் அஹ்மத் 12 ரன்களுக்கும், நோவ கிராஸ் மற்றும் சிகந்தர் சுல்ஃபிகர் ஆகியோர் தலா 2 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். மேற்கொண்டு மறுபக்கம் ஓரளவு தாக்குப்பிடித்டு விளையாடிய விக்ரம்ஜித் சிங்கும் 24 ரன்களுடன் நடையைக் கட்டினார்.