
ஜிம்பாப்வே அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஏப்ரல் 28ஆம் தேதி சிட்டாகாங்கில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் வங்கதேச அணி தோல்வியைத் தழுவினாலோ அல்லது போட்டியை டிரா செய்தாலோ தொடரை இழக்கும் என்பதால் அந்த அணி கூடுதல் கவனத்துடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான வங்கதேச அணி இன்று அறிவித்துள்ளது.
அதன்படி இப்போட்டிக்கான வங்கதேச அணியில் சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பங்கேற்பதற்காக நஹித் ரானா அணியில் இருந்து விலகியுள்ள நிலையில், அவரது இடத்தில் அனமுல் ஹக் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜாகீர் ஹசனுக்கு பதிலாக அனமுல் ஹக் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.