Advertisement

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்தார் தமிம் இக்பால்!

வங்கதேச அணியின் கேப்டன் தமிம் இக்பால் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெருவதாக இன்று அறிவித்துள்ளார். 

Advertisement
Bangladesh Stalwart Tamim Iqbal Announces Retirement From T20I Cricket
Bangladesh Stalwart Tamim Iqbal Announces Retirement From T20I Cricket (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 17, 2022 • 01:02 PM

தமிம் இக்பால் 2007 முதல் வங்கதேச அணிக்காக விளையாடி வந்தார். அந்நாட்டின் சார்பாக டி20 போட்டியில் சதமடித்த ஒரே வீரர் என்ற பெருமையை இதுவரை அவரிடமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 3வது அதிகபட்ச ரன்களை எடுத்த வங்கதேச அணி வீரராகவும் அவரே இருக்கிறார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
July 17, 2022 • 01:02 PM

வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது. இந்த தொடரின் தொடர் நாயகன் விருது வங்கதேச கேப்டன் தமிம் இக்பாலுக்கு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Trending

இந்நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தமிம் இக்பால் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிம் இக்பால் தனது முகநூல் பக்கத்தில், “இன்று முதல் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து நான் ஒய்வு பெறுகிறேன். அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக ஜனவரியில் தமிம் இக்பால் கூறுகையில், “டி20 கிரிக்கெட்டில் என்னுடைய எதிர்காலம் பற்றி விவாதித்தோம். இந்த வருட டி20 உலகக் கோப்பை வரை நான் விளையாட வேண்டும் என வங்கதேச கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் என்னை வலியுறுத்தினார்கள். 

ஆனால் எனக்கு வேறு எண்ணம் உள்ளது.  அடுத்த ஆறு மாதங்களுக்கு டி20 கிரிக்கெட்டில் விளையாடப் போவதில்லை. டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே என் கவனம் இருக்கும். டி20 கிரிக்கெட்டில் வங்கதேச அணிக்கு என் தேவையிருக்காது என எண்ணுகிறேன். 

ஆனால் கடவுள் நினைத்தால், கிரிக்கெட் வாரியத்துக்கு நான் தேவைப்பட்டால் விளையாட நான் தயார். அப்போது டி20 கிரிக்கெட்டில் மீண்டும் விளையாடுவது பற்றி யோசிப்பேன்” என்று தெரிவித்தார். 

இந்நிலையில் அவர் தீடீரென சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது வங்கதேச ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement