Advertisement

BAN vs NZ, 3rd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

நியூசிலாந்து - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.

Advertisement
Bangladesh vs New Zealand, 3rd T20I – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI
Bangladesh vs New Zealand, 3rd T20I – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 04, 2021 • 06:08 PM

டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணி வங்க்தேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரி விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் வங்கதேச அணி வெற்றிபெற்று அசத்தியது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
September 04, 2021 • 06:08 PM

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது  டி20 போட்டி நாளை (செப்.5) தாக்காவில் நடபெறவுள்ளது. ஏற்கெனவே முதலிரு டி20 போட்டியிலும் நியூசிலாந்து அணி படுதோல்வியைச் சந்தித்துள்ளதால் இப்போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

Trending

போட்டி தகவல்கள் 

  •         மோதும் அணிகள் - வங்கதேசம் - நியூசிலாந்து
  •         இடம் - ஷேர் பங்களா மைதானம், தாக்கா
  •         நேரம் - பிற்பகல் 3.30 மணி 

போட்டி முன்னோட்டம்

மஹ்மதுல்லா தலைமையிலான வங்கதேச அணி, நியூசிலாந்துடனான முதலிரு டி20 போட்டியிலும் வெற்றிபெற்ற உற்சாகத்துடன் நாளை மூன்றாவது டி20 போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.

அதிலும் குறிப்பாக வங்கதேச அணியின் பந்துவீச்சாளர்கள் முஸ்தபிசூர் ரஹ்மான், ஷகிப் அல் ஹசன், சைஃபுதீன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அந்த அணிக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது. பேட்டிங்கில் ஷகிப், மஹ்மதுல்லா, முஷ்பிக்கூர் ரஹீம் ஆகியோர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் வங்கதேச அணி நிச்சயம் இத்தொடரைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை வங்கதேச அணியிடம் அடுத்தடுத்து இரண்டு தோல்வியைச் சந்தித்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. அதிலும் நேற்று நடைபெற்ற போட்டியில் வெற்றியின் விழிம்புவரை சென்று தோல்வியைத் தழுவியது. 

மேலும் நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய டாம் லேதம் அணியின் துருப்புச்சீட்டாக இருந்து வருகிறார். இதனால் மற்ற வீரர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

மேலும் நாளைய போட்டியில் நியூசிலாந்து தோல்வியடைந்தால், முதல்முறையாக வங்கதேசத்திடம் டி20 தொடரை இழக்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

நேருக்கு நேர்

  •         மொத்த போட்டிகள் - 12
  •         நியூசிலாந்து வெற்றி - 10
  •         வங்கதேசம் - 2

உத்தேச அணி
வங்கதேசம் -
முகமது நைம், லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன், மஹ்மதுல்லா (கே), முஷ்பிக்கூர் ரஹீம், அஃபிஃப் ஹொசைன், நூருல் ஹசன், மஹதி ஹசன், முகமது சைபுதீன், நசும் அஹ்மத்.

நியூசிலாந்து - ரச்சின் ரவீந்திரா, டாம் ப்ளண்டெல், வில் யங், கொலின் டி கிராண்ட்ஹோம், டாம் லாதம் (கே), ஹென்றி நிக்கோல்ஸ், கோல் மெக்கன்சி, டக் பிரேஸ்வெல், அஜாஸ் பட்டேல், அமிஸ் பென்னட், பென் சீயர்ஸ்

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

ஃபேண்டஸி லெவன்

  •         விக்கெட் கீப்பர்கள் - நூருல் ஹசன், முஷ்பிக்கூர் ரஹீம், டாம் லேதம்
  •         பேட்ஸ்மேன்கள் - லிட்டன் தாஸ், வில் யங்
  •         ஆல் -ரவுண்டர்கள் - மெஹதி ஹசன், ரச்சின் ரவீந்திரா, ஷகிப் அல் ஹசன், கோல் மெக்கன்சி
  •         பந்துவீச்சாளர்கள் - முஸ்தபிசூர் ரஹ்மான், அஜாஸ் பட்டேல்

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement