Bangladesh vs West Indies 2nd ODI Match Prediction: வெஸ்ட் இண்டிஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றும் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை தாக்காவில் உள்ள ஷேர் பங்களா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் வங்கதேச அணி ஏற்கென்வே முதல் போட்டியில் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் இந்த போட்டியை எதிர்கொள்ள இருக்கிறது. அதேசமயம், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
BAN vs WI 2nd ODI: போட்டி தகவல்கள்