
Bangladesh Wicketkeeper-Batter Mushfiqur Rahim Retires From T20 International (Image Source: Google)
வங்கதேச அணியின் சீனியர் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் முஷ்ஃபீக்கூர் ரஹீம். 2005ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான முஷ்ஃபிக்கூர் ரஹீம், 2006ஆம் ஆண்டு வெள்ளைப்பந்து (ஒருநாள், டி20) போட்டிகளில் அறிமுகமானார்.
வங்கதேச அணிக்காக 82 டெஸ்ட், 236 ஒருநாள் மற்றும் 102 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். டி20 கிரிக்கெட்டில் 102 போட்டிகளில் ஆடி 1500 ரன்கள் அடித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டி20 தொடராக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இந்த தொடரின் லீக் சுற்றில் இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளிடம் தோற்று லீக் சுற்றுடன் தொடரை விட்டு வெளியேறியது வங்கதேச அணி.