
BANW vs AUSW, 2nd ODI: வங்கதேசத்தை பந்தாடி தொடரை வென்றது ஆஸ்திரேலியா! (Image Source: Google)
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய மகளிர் அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று தாக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து பேட்டிங் செய்த வங்கதேச அணி வீராங்கனைகள் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். அந்த அணியில் ஃபர்கான ஹாக் 7 ரன்களுக்கும், சோபனா 3 ரன்களுக்கும், முர்ஷிதா 5 ரன்களுக்கும், கேப்டன் நிகர் சுல்தானா ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.