
இந்திய மகளிர் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய மகளிர் அணி நான்கு போட்டிகளிலும் வெற்றிபெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று சில்ஹெட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு ஷஃபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷஃபாலி வர்மா தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த ஸ்மிருதி மந்தனா - தயாளன் ஹேமலதா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா 33 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் 30 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அவர்களைத் தொடர்ந்து 2 பவுண்டரி, 2 சிஸ்கர்களுடன் தயாளன் ஹெமலதா ஆட்டமிழந்தாலும், இறுதிவரை களத்தில் இருந்த ரிச்சா கோஷ் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 28 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச மகளிர் அணி தரப்பில் ரபேயா கான் மற்றும் நஹிதா அக்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியில் டாப் ஆர்டர் வீராங்கனைகள் திலாரா அக்தர், சோபனா மோஸ்ட்ரி, ருபியா அக்தர், கேப்டன் நிகர் சுல்தானா உள்ளிட்டோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.