
உலகக் கோப்பைத் தொடரில் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபகர் சமான் மற்றும் இமாம் உல் ஹக் களமிறங்கினர். ஃபகர் சமான் 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின், களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் 5 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இமாம் உல் ஹக் 15 ரன்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி 38 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனையடுத்து, முகமது ரிஸ்வான் மற்றும் சௌத் ஷகீல் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அணியை சரிவிலிருந்து மீட்டது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். சௌத் ஷகீல் 68 ரன்கள், முகமது ரிஸ்வான் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கியவர்களில் இஃப்திகார் அகமது 9, ஷதாப் கான் 32, முகமது நவாஸ் 39 எடுத்து ஆட்டமிழந்தனர்.