
ஐபிஎல் 14ஆவது சீசனில் சிஎஸ்கே, டெல்லி கேபிடள்ஸ் ஆகிய இரு அணிகளும் முதல் 2 அணிகளாக பிளே ஆஃபிற்கு முன்னேறின. ஆர்சிபி அணியும் 3வது அணியாக முன்னேறியது. 4வது அணியாக பிளே ஆஃபிற்கு முன்னேற, கேகேஆர், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் கடும் போட்டியிட்டு வருகின்றன.
இப்படியாக 7 அணிகளும் தொடரில் இருக்க, சன்ரைசர்ஸ் அணி மட்டும் பாதி தொடரிலேயே தொடரிலிருந்து லீக் சுற்றுடன் வெளியேறுவதை உறுதி செய்துவிட்டது. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி படுமோசமாக ஆடியது. சீசனின் இடையே வார்னர் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டு கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் வில்லியம்சனின் கேப்டன்சியிலும் சன்ரைசர்ஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்தது.
சன்ரைசர்ஸ் அணி எப்போதுமே பேட்டிங்கில் பெரியளவில் சோபிக்காது. அந்த அணியின் பலமே அதன் பந்துவீச்சுதான். எவ்வளவு குறைவான ஸ்கோர் அடித்தாலும், இருக்கிற ஸ்கோரை வைத்து எதிரணிக்கு டஃப் கொடுக்கும் சன்ரைசர்ஸ். அப்படித்தான் கேகேஆருக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் நடந்தது.