என்னால் ஒரே சமயத்தில் பயிற்சியாளாராகவும் கேப்டனாகவும் செயல்பட முடியாது - ஷாகிப் அல் ஹசன்!
வங்கதேச அணியின் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தன்னால் ஒரே சமயத்தில் பயிற்சியாளாராகவும் கேப்டனாகவும் செயல்பட முடியாது என கூறியுள்ளார்.
வங்கதேச - வெஸ்ட் இண்டீஸில் அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
இதில் வங்கதேச அணியில் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் மட்டும் முதல் இன்னிங்ஸில் 51, இரண்டாவது இன்னிங்ஸில் 63 ரன்களும் எடுத்தார். இருப்பினும் மற்ற வீரர்களின் மோசமான பேட்டிங் காரணமாக முதல் டெஸ்ட் போட்டி தோல்வியில் முடிவடைந்தது.
Trending
இந்நிலையில் தோல்விகுறித்து பேசிய வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன்,தன்னால் ஒரே சமயத்தில் பயிற்சியாளாராகவும் கேப்டனாகவும் செயல்பட முடியாது என கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இந்தப் போட்டியில் நான் அதிகமாக எதுவும் எதிர் பாரக்கவில்லை. ஆனால், எங்களால் இன்னும் சிறப்பாக விளையாட முடியும் என நம்புகிறேன். முதல் இன்னிங்ஸில் மிகவும் குறைவான ரன் எடுத்ததால் ஆட்டம் மிகவும் பாதித்தது. எங்களிடம் மிகவும் டெக்கினிக்கலாக விளையாடும் வீரர்கள் குறைவு.
எல்லோருக்கும் டெக்கினிக்கல் பிரச்சனை இருக்கிறது. இருப்பினும் அவர்களது குறையை கண்டறிந்து சமாளித்து விளையாட வேண்டும். இது ஒருவரின் தனிப்பட்ட இடத்திலிருந்து வர வேண்டும். மேலும் இது பயிற்சியாளரின் வேலை. என்னால் ஒரே சமயத்தில் பயிற்சியாளாராகவும் கேப்டனாகவும் செயல்பட முடியாது. அவரவர் வேலையை அவரவர்கள் செய்தால் எனக்கு உதவியாக இருக்கும்.
அணியில் மாற்றங்களை ஏற்படுத்தினால் மட்டும் அணிக்கு நல்லது ஏறபடுமென உறுதியாக கூற முடியாது. அணியாக சிறப்பாக விளையாட வேண்டும். அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவோமென நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now