
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் 43ஆவது லீக் போட்டியானது நேற்று லக்னோ மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. அதன்படி நேற்றைய போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து வெறும் 126 ரன்களை மட்டுமே குவித்தது. பெங்களூரு அணி சார்பாக விராட் கோலி 31 ரன்களும், டூ பிளெசிஸ் 44 ரன்களும் குவித்தனர். பின்னர் 127 ரன்கள் அடித்தால் வெற்றி என்று எளிய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியானது தொடக்கத்திலிருந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இறுதிவரை போராடியும் கடைசியில் 19.5 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் அற்புதமான வெற்றியை பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றிபெற்றது குறித்து பேசிய ஆர்சிபி அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ், “சின்னசாமி மைதானமும் லக்னோ மைதானமும் முற்றிலும் வெவ்வேறாக இருக்கிறது. முதல் ஆறு ஓவர்கள் நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடியதாக நினைக்கிறேன். அதே போன்று விளையாடி இருந்தால் நிச்சயம் எங்களது ரன் குவிப்பு அதிகமாக இருந்திருக்கும்.