
தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணிக்கு எதிரான இந்த டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் அந்த அணி மீதான விமர்சனங்களும் அதிகரித்துள்ளன.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்க அணி இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்தவகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 24ஆம் தேதி டர்பனிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 5ஆம் தேதி கிங்ஸ்மீத்திலும் நடைபெற்றவுள்ளது. மேலும் இத்தொடருக்கான இலங்கை அணியையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது.
அதன்படி தனஞ்செயா டி சில்வா தலைமையிலான இந்த அணியில் பதும் நிஷங்கா, திமுத் கருணாரத்ன, தினேஷ் சந்திமால், குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம போன்ற வலுவான பேட்டர்களும், லஹிரு குமார, அசித்த ஃபெர்னாண்டோ, கசுன் ராஜித, மிலன் ரத்நாயக்க, பிரபாத் ஜயசூரிய மற்றும் நிஷான் பெய்ரிஸ் உள்ளிட்ட பந்துவீச்சாளர்களும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளன.