
தென் ஆப்பிரிக்க அணி இலங்கை அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அந்தவகையில் தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை (நவம்பர் 27) டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடர்களுக்கான இரு அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன.
சமீப காலங்களில் சிறப்பான கிரிக்கெட்டின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணி ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளதால் அந்த அண்யின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதேசமயம் மறுபக்கம் தென் ஆப்பிரிக்க அணி சமீபத்தில் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய நிலையில் இத்தொடரை எதிர்கொள்கிறது.
இந்நிலையில், இப்போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பிளேயிங் லெவனில் காயம் காரணமாக கடந்த தொடரில் இருந்து விலகிய டெம்பா பவுமா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதுடன், அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளர். இதுதவிர மார்கோ ஜான்சன், ஜெரால்ட கோட்ஸி ஆகியோரும் பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளனர்.