
BBL 11: Perth Scorchers beat Adilaide Strikers by 49 runs (Image Source: Google)
பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் - அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த பெர்த் அணிக்கு தொடக்க வீரர் காலின் முன்ரோ அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து அசத்தினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பெர்த் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 195 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தர் காலின் முன்ரோ 114 ரன்களைக் குவித்திருந்தார்.