
BBL 11: Sydney Sixers Beat Hobert Hurricans by 14 runs (Image Source: Google)
பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் - ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஹரிகேன்ஸ் அணி முதலில் பந்துவீசியது.
அதன்படி களமிறங்கிய சிட்னி சிக்சர்ஸ் அணி ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் மிடில் ஆர்டரில் களமிறங்கிய கேப்டன் ஹெண்ட்ரிக்ஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சிட்னி சிக்சர்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஹெண்ட்ரிக்ஸ் 73 ரன்களைச் சேர்த்தார். ஹரிகேன்ஸ் அணி தரப்பில் ரோஜர்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.