
BBL 11: Sydney Thunder sign Sam Billings for upcoming season (Image Source: Google)
இங்கிலாந்து அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சாம் பில்லிங்ஸ். இவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகாக விளையாடியுள்ளார்.
இந்நிலையில் டிசம்பர் மாதம் தொடங்க இருக்கும் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான பிக் பேஷ் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாட சாம் பில்லிங்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய சாம் பில்லிங்ஸ்,“சிட்னி தண்டர் அணிக்காக விளையாடவுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதன் மூலம் என்னுடைய பழைய மற்றும் இளம் அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் இப்பயணம் அமையுள்ளது உற்சாகமளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.